சென்னையில் இரவு 8 மணிக்கே கொடிகட்டி பறக்கும் விபசாரம்..ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!.

சென்னையில் இரவு 8 மணிக்கே கொடிகட்டி பறக்கும் விபசாரம்..ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!.

முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இருட்டு ஏரியாவில் நடந்து வந்த பாலியல் தொழில், இப்போது ரொம்பவே முன்னேறி விட்டது. விஐபிக்கள் வந்து செல்லும் ரூட்டில் அதுவும் இரவு 8 மணிக்கே ஆரம்பித்து விடுகிறது. அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதீட்ரல் சாலையில் நடக்கிறது இந்த கூத்து. 

ஜீன்ஸ், டிசர்ட் என அல்ட்ரா மார்டன் டிரஸ்களிலும், சேலை உடுத்தி மல்லிகை பூ சூடியும் பாலியல் தொழிலாளிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதுவும் இரவு 8 மணிக்கே இவர்கள் ஆஜராகி விடுகிறார்கள். ரோட்டில் செல்லும் யாரையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. வாகனங்களில் செல்பவர்களை பார்த்து சிரிப்பதும், சைகை செய்து அழைப்பதும் போன்ற செய்கைகளால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றனர். 

இந்த சாலையில் கடந்த சில நாட்களாகத்தான் இவர்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வரிசையாக 10க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறங்களிலும் நிற்கிறார்கள். தனியாக செல்லும் ஆண்களை மட்டுமில்லாமல் குடும்பத்துடன் செல்பவர்களை பார்த்தும் சிரித்து அழைக்கிறார்கள். இதனால் மனைவி, குழந்தைகளை இவ்வழியாக அழைத்துச் செல்லவே சங்கோஜமாக இருக்கிறது. 

இவர்கள் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்களையும் விட்டு வைப்பதில்லை. அங்கும் முகாமிட்டு பஸ்சுக்காக காத்திருப்பவர்களை அழைக்கிறார்கள். சில சமயங்களில், கஸ்டமர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் இடையே அடிதடி சண்டையும் அரங்கேறுகிறதாம். ‘2 நாளுக்கு முன்னாடி ஒருத்தர் ரேட் பேச வந்தாரு. அவங்களுக்குள்ள பேச்சு எல்லைமீறி கைகலப்பில முடிஞ்சது. 

நுங்கம்பாக்கம் கதீட்ரல் சாலை மட்டுமின்றி சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பாலியல் தொழில் கொடி கட்டிப்பறக்கிறது. சோழிங்கநல்லூர் சிக்னல் மற்றும் காரம்பாக்கம் பகுதிகளில் சாலையில் பட்டப்பகலிலேயே திருநங்கைகள் தொல்லை அதிகரிக்கிறது.

சூளைமேடு, இந்திரா நகர் ரயில் நிலையம், வடபழனி பஸ் நிலையம், விருகம்பாக்கம், திநகர் என அனைத்து முக்கிய இடங்களிலும் இரவானதும் இவர்களது தொல்லைக்கு அளவில்லாமல் போகிறது. இந்த கூத்துகளை எல்லாம் கண்டும் காணாமலும் செல்லும் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்வி குறியே..!

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil