இயற்கை வழியில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க எளிய வழிகள்...(பெண்களே மனதில் வைங்க)

இயற்கை வழியில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க எளிய வழிகள்...(பெண்களே மனதில் வைங்க)

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும், திடமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும். அதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கவே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பெரும் எரிச்சலே, போதுமான அளவு பால் சுரக்காமல் இருப்பது தான். அதற்காக மருந்து மாத்திரைகள் என நாட தேவையில்லை. பாதுகாப்பான சில இயற்கை வழியின் மூலமாகவே பால் சுரப்பதை எளிதில் அதிகரிக்கலாம். அதற்காக கீழே கூறப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி பால் கொடுத்தால், அது மார்பகங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அதிக அளவில் பால் தேவைப்படுகிறது என்று உடலுக்கு சொல்லப்படும். மேலும் அது குழந்தைக்கும் பாலை உறிஞ்சுவதற்கு வசதியாக இருக்கும். ஒரே பக்கத்தில் அதிக அளவில் பாலை குடித்துவிட்டால், அந்த மார்பகம் பால் இல்லாமல் வற்றி போகும். அதனால் அந்த பகுதியில் மீண்டும் பால் சுரப்பதற்கு, ஒரு முறை பால் கொடுக்கும் போது, இரண்டு அல்லது மூன்று முறை பால் கொடுக்கும் பக்கத்தை மாற்ற வேண்டும். 

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகங்களை நன்றாக அழுத்த வேண்டும். இது பால் வெளிவர சுலபமாக இருக்கும். அதனால் ஒரு முறை பால் கொடுக்கும் போது, மார்பகங்கள் முழுமையாக காலியாகும். 

குழந்தை பிறப்புக்கு உதவியாக இருக்கும் வெந்தயத்தை உண்டால், அது பால் சுரப்பதற்கும் பயன்படும். ஆனால் அது வாயுவை ஏற்படுத்துவதால், சற்று கவனமாக அளவாக சாப்பிட வேண்டும். 

பால் சுரப்பதற்கு சில பிஸ்கட்களும் உதவும். இதனை கடையில் வாங்கலாம் அல்லது வீட்டிலேயே கூட தயாரிக்கலாம் அல்லது இந்த குணங்கள் அடங்கிய ஓட்ஸை சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவியாக இருக்கும்.

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் மீதே தாய் தன் கவனத்தை செலுத்துவதால், நல்ல உணவை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஆகவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொண்டால் தான், அது பால் சுரக்க எரிபொருளாக செயல்படும். 

சொல்வதை விட, செய்வது தான் கஷ்டம். முக்கியமாக பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும் போது தான் அதிக அழுத்தம் ஏற்படும். இவ்வகை அழுத்தம் ஏற்படும் போது, உடலில் ஆக்ஸிடாக்சின் சுரக்கும். இது பால் சுரப்பதை குறைக்கும். எனவே மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்..

பிரசவித்த பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் வெல்லக்கருப்பட்டியை சாப்பிட கொடுப்பார்கள். இதற்கான காரணம் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்லாது பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டுதான். ஏனெனில் வெள்ளைப் பூண்டு அதிகம் சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். 

மேலும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கும் வெள்ளைப் பூண்டு சிறந்தது. அதேபோல் கருப்பட்டியில் உள்ள இரும்புச் சத்து தாயின் மூலம் தாய்பால் வழியாக குழந்தைக்குப் போய் சேரும். அதேபோல் பசும் பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். .கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். 

அமுக்கிராங் கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும். அதேபோல் தக்காளி இலைகளை ,காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். 

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். அதேபோல் கல்யாண முருங்கை இலையும் பாசி பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்....!

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil