தாம்பத்யத்தை பெண்கள் புறக்கணிக்க காரணம்..? (வயதுவந்தோர் மட்டும்)

தாம்பத்ய வாழ்க்கை நிறைய பேருக்கு கசக்கிறதே அது ஏன்..? (வயதுவந்தோர் மட்டும்)

தாம்பத்ய வாழ்க்கை இப்போது நிறைய பேருக்கு கசக்கிறது. அது எதுக்கு? என்று செக்சை புறக்கணிக்கிறார்கள். புறக்கணிக்கப்பட என்ன காரணங்கள்? பெண்ணின் விருப்பமின்மைக்கான காரணங்கள்: 

பதவி இரண்டையும் பெண், தன் கணவரிடம் எதிர்பார்க்கிறாள். திருமண பேச்சுவார்த்தை நடக்கும்போது வரனின் சம்பளம் உயர்த்தி சொல்லப்பட்டால்- அவர் அலுவலகத்தில் உயர்ந்த பதவி வகிப்பதாக கூறப்பட்டால்- திருமணத்திற்கு பிறகு அவை எல்லாம் ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் என்ற உண்மையை மனைவி உணர்ந்தால், கணவரை செக்சில் புறக்கணிக்கிறாள். ‘பொய் சொல்லிவிட்டார். பதிலுக்கு அவரை அவமானப்படுத்தவேண்டும்’ என்ற எண்ணமோ, ‘இவரை நம்பி எப்படி தன்னை ஒப்படைப்பது’ என்ற தயக்கமோ அதற்கு காரணமாக இருக்கும். 

கணவர் மீது ஏதாவது ஒரு வகையில் தற்காலிக கோபம் இருக்கும். அதை அவருக்கு புரியவைத்து, ‘என்ன பிரச்சினை உனக்கு.. ஏன் இப்படி பண்ணுறே’ என்று கணவர் பக்கத்தில் இருந்து சமாதானக் கொடி பறக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களில் சிலர் இரவில், அழகுக் குறிப்பை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.கணவருக்காகத்தான் தன்னை அழகுப்படுத்திக் கொள்கிறேன்’ என்று கூறிக் கொண்டு, கணவர் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் மனநிலையில் இருக்கும்போது, தன் முகத்திற்கு ‘பேஸ் பேக்’ போட்டுக் கொள்வார்கள். இதோ காய்ந்துவிடும்.கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள் கழுவிவிடுகிறேன் என்று கூறிவிட்டு, கணவர் தூங்கிய பின்பே முகத்தை சுத்தம் செய்வார்கள். 

காதலிக்கும் காலத்திலோ, திருமணமான புதிதிலோ ‘உங்களை மாதிரியான அழகான, அம்சமான ஆணை நான் பார்த்ததே இல்லை’ என்று பெண்கள் சொல்வதுண்டு. இது அவரது செக்ஸ் ஆர்வத்தை மிகைப்படுத்தும் செயலாகும். அவரது செக்ஸ் ஆர்வத்தை குறைக்க விரும்பும்போது அதே மனைவி, ‘என்ன இது டிரஸ்.. ஏன் இப்படி ஹேர் ஸ்டைல்.. உங்க உடல் எடை கண்டபடி ஏறுகிறது.. அழகாக தோன்றவேண்டும் என்ற அக்கறையே உங்களிடம் இல்லை’ என்று கூறி, அவர் ‘ஆர்வத்திற்கு’ அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். 

கணவர் தற்போது உறவுக்கு தயார் இல்லை என்பதை புரிந்துகொண்டு, தான் ஆசையாக இருப்பதுபோல் சில பெண்கள் காட்டிக்கொள்வார்கள். கணவர் அப்போது அவளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார். அதையே காரணம் காட்டி, ‘நீங்க அன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே இல்லை. நீங்க விரும்பும்போது மட்டும் நான் வரணுமா?’ என்று கேள்வி எழுப்பி, வாரக்கணக்கில் கணவரை பட்டினி போட்டுவிடுவார்கள் பெண்கள். பொதுவாக ஆண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: 

எல்லா பெண்களும் தங்கள் கணவர் வெளியே செல்லும் போது அழகாக தோன்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீட்டில் கணவர் தன்னோடு இருக்கும்போதும் அதுபோன்று அழகுடன் கவர்ச்சியாக தோன்றவேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. அதை 99 சதவீத கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் சரியாக உடலை கழுவாமல், மேல் சட்டை இல்லாமல், தலையையும் வாராமல் கடனே என்று வீட்டிற்குள் அலைந்துகொண்டிருப்பார்கள். இதை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அந்த தோற்றம் தங்களுக்கு ரசிக்கும்படி இல்லை என்பதை காட்டுவதற்காக, செக்ஸ்க்கு இடம் கொடுக்காமல் புறக்கணித்துவிடுவார்கள். 

கணவருக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகை உண்டு. அதுபோல் மனைவிக்கும் உண்டு என்பதை பெரும்பாலான கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடிக்காத நடிகரின் படத்தை பார்க்கவைத்துவிடுவார்கள். அதை வெளிப்படுத்திக்கொள்ளாத பெண்கள் ‘என்கிட்டே தானே வருவீங்க.. பார்த்துக்கிறேன்’ என்று கூறிவிட்டு, சினிமா பார்த்ததால் தலை வலிக்கிறது என்று கூறிவிட்டு கணவரை கவனிக்காமலே போய் படுத்துவிடுவதுண்டு. 

சினிமாவில் மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்தில் மனைவியை புறக்கணிக்கும் கணவர்கள் உண்டு. உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் மனைவியின் விருப்பத்தை கேட்காமலே தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, மனைவியை அதை சாப்பிடும்படி நிர்பந்திப்பார்கள். மனைவி பதிலுக்கு செக்ஸ் விஷயத்தில் கணவரிடம் இருந்து முரண்பட்டு விடுவாள். 

எல்லோரது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்காது. எங்கோ யாரோ ஒருவன் தன் மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்திருப்பான். அதையே மனைவி நினைத்து, தன் கணவரும் அப்படி நடந்துகொள்வாரோ என்று நினைத்தால், கணவரின் ஆசைக்கு அவள் இடம்கொடுக்க மறுப்பதுண்டு. அதுபோல் யாராவது ஒரு பெண் தன் கணவருக்கு துரோகம் செய்ததையே கணவர் நினைத்துக்கொண்டிருந்தால் மனைவி மீது நம்பிக்கை இல்லாமலே இருந்துவிடுவார். 

இருதரப்புமே நல்ல சம்பவங்களை மட்டுமே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்மறையான சம்பவங்களையே நினைத்து, தங்கள் வாழ்க்கையை சிக்கல் ஆக்கிக்கொள்ளக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கை இருந்தால் அவர்கள் மணவாழ்க்கை குறிப்பாய் அவர்கள் ‘தாம்பத்ய வாழ்க்கை’ சிறப்பாய் இருக்கும்....!

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil