உங்கள் துணையை தேர்வு செய்ய வழிமுறை..?..(திருமணத்திற்கு முன் கவனத்திற்கு)

உங்கள் துணையை தேர்வு செய்ய வழிமுறை..?..(திருமணதிற்கு முன் கவனத்திற்கு)

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்...

*   இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் 

*  ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும். 

* தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும். 

*   மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும். 

*முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது. 

* ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும். 

*  மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள். 

*  நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள். 

* பணக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது. 

*சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது....!

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil