உங்க காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க ஆசையா..?

உங்க காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க ஆசையா..?

பொதுவாக பெண்களைத் திருப்திப்படுத்துதல் மிகவும் கடினமான செயல் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆண்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் நெடுநாட்களுக்கு பெண்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், அவர்களது இதயத்தைத் தொடுவதுதான். 

பெண்களின் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் என்றால், மீதமுள்ள காரியங்கள் எவையும் கடினமல்ல. பெரும்பாலான இளைஞர்கள் தமது காதலிகளுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கிப் பரிசளித்தல் மட்டுமே, அவர்களது இதயத்தில் இடம் பெற ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆமாம், பரிசளித்தல் நல்லது தான். ஆனால் உண்மையான இதயத்தையும், அன்பையும் பரிசளித்தால், அவற்றின் பிரகாசத்திற்கு முன் இதர பரிசுப் பொருட்கள் எல்லாம் மங்கிவிடும். முதலில் காதலியின் இதயத்தை வெல்ல மிக எளிதான வழி என்ன தெரியுமா? அவர் உண்மையிலேயே எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர் என்பதைப் புரிந்து கொள்வது தான். பெண்களின் உள்ளத்தில் உள்ளதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்று ஆண்கள் கூறி வருகிறார்கள். 

ஆனால் உண்மை அதுவல்ல. பெண்களைப் புரிந்து கொள்வதுடன் அவர்களது உள்ளத்தோடு உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். ஆண்கள் எதையும் நேரடியாகப் பேசிவிடுவார்கள். ஆனால், பெண்களோ எல்லாவற்றையும் மறைமுகமாக உணர்த்துவதையே விரும்புவார்கள். 

ஆகவே உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு இணைப்புப் புள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இறுதியாக இளைஞர்களே! நீங்கள் உங்களது செக்ஸ் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் காலத்திற்கு அடக்கியே வைத்திருங்கள். செக்ஸ் என்பது உறவின் ஆழத்தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனாலும், உறவின் மையமாக அது ஆகி விடக் கூடாது. 

உடல் சார்ந்த இன்பம் மட்டும் தான் உங்களுக்கு மிகவும் முக்கியம் என்பது போன்ற தோற்றத்தை, நீங்கள் உங்கள் காதலியின் மனதில் உண்டாக்கி விடக் கூடாது. அது உங்களது உறவை வளர்ப்பதற்கு ஒருபோதும் துணையாக நிற்கப் போவதில்லை. மேலும் காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிப்பதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைக் கீழே பட்டியலிடுகிறோம். அவற்றைப் படித்து உங்கள் உறவை மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

நல்ல பாதுகாப்பாக இருப்பது 

பெண்கள் தமது காதலரிடமிருந்து பாதுகாப்பான, பத்திரமான உணர்வை எதிர்பார்க்கிறார்கள். அதற்காக நீங்கள், வலிமை நிறைந்த, சாகசக்காரராகவோ, சினிமா கதாநாயகன் போலவோ பலசாலியாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. தமது வார்த்தைகளைக் காப்பாற்றுகின்ற, சொன்ன சொல்லை உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுகின்ற ஆணைத் தான், ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறாள். அப்படிப்பட்ட ஆண்கள் தான் பெண்களைக் கவர்கிறார்கள். 

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சொல்வது 

மற்ற பெண்களை மயக்குகின்ற அழகிய தோற்றமோ அல்லது படுக்கையறையில் விளையாடும் விதவிதமான மன்மத விளையாட்டோ அல்லது ஆடம்பரமான சொத்துக்களோ, பெண்களது மனதைக் கவர்வது இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், உங்களது தன்னம்பிக்கையையும், எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று நீங்கள் சொல்லும் தைரியத்தையும் தான். 

நம்பிக்கை வைத்திருப்பது 

உறவின் மிக முக்கியமான பிணைப்பு அம்சம் என்னவென்றால், நம்பிக்கை. நம்பிக்கையானது விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் சம்பாதிக்கப்பட வேண்டியது. எனவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், உங்கள் காதலியிடம் உங்களது நம்பகத்தன்மையை புரிய வைத்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் எப்பொழுதுமே, எந்தச் சூழ்நிலையிலும் நம்பத் தகுந்தவர் என்பதை சொல்லத் தயங்காதீர்கள். 

மரியாதையுடன் நடத்துவது 

உங்களது காதலிக்குரிய மரியாதையை எப்போதும் அவருக்குக் கொடுங்கள். எந்த ஒரு பெண்ணும் தன்னையும், தனது உணர்வுகளையும், கருத்துக்களையும் மதிக்கும், ஒருவரது அன்பினை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவாள். அவருடன் இருப்பதையே மிகவும் விரும்புவாள். மேலும் அவள் எதிர்பார்க்கும் அளவுக்கு, அவளை மென்மையாக, காதலுடன் நடத்தும் ஒருவரது அன்பினையே எதிர்பார்க்கிறாள். 

அன்பை வெளிப்படுத்துவது 

வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக உறவுகளுக்கிடையே, பலரகமான ரசனைகளோடு கூடிய உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். பழைய கால முறைகளை மறந்துவிடுங்கள். புதிது புதிதாக எதையாவது யோசித்துக் கண்டுபிடித்து, அதனை நல்லதொரு நேரத்தில் உங்கள் காதலியிடம் வெளிப்படுத்துங்கள். உங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

அவர் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதோ, படுக்கையிலிருக்கும் போதோ, துணிகளைத் துவைக்கும் போதோ, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, அவரது அன்பை வெல்லுங்கள். இவ்வாறு வெளிப்படுத்தப்படும் உங்கள் அன்பு, அவருக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தரத்தக்கதாக இருக்க வேண்டும். 

உணர்வுகளை வெளிப்படுத்துவது 

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் பெண்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இளைஞர்களே, நீங்களும் உங்கள் உணர்வுகளை சொற்களாலும்,செயல்களாலும் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் அன்பிற்குரியவர்களது ஆடைப் பொருத்தம், தலை அலங்காரம் அல்லது அவர் அணிந்துள்ள புதிய நகைகளின் அழகு ஆகியவற்றைப் பாராட்டுதலாகக் கூட இருக்கலாம். அதிலும் அவர் உங்களது கருத்தைக் கேட்பதற்கு முன்பாக முந்திக் கொண்டு, அவற்றின் அழகைக் கூறுங்கள்.....!

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil